/ / புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இருவர் பலி

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இருவர் பலி

சீதுவ, முகலனகமுவ, ஈரியகஹலித புகையிரத கடவையில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்கள் இருவர் உட்பட நான்கு பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் சீதுவ மற்றும் அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post
Pathivu
@ காப்புரிமை -2018
Design By:Sifi Web